எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 88

மிகவும் குறைவாகவே இருக்கின்றது. "ஏ-நிலை" தேர்வுகளுக்குப் பிறகு, அவர்கள் வேலை தேடி அண்டை நகரங்களுக்குச் செல்லும்பொழுது, அவர்களால் அங்குள்ள பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதையுணர்ந்து திகைப்படைகிறார்கள். அவர்களுள் சிலர் ஆங்கிலத்திறனை வளர்த்துக�ொண்டு மற்ற மாணவர்கள�ோடு ப�ோட்டியிட தயாரானாலும் பெரும்பாலான�ோர் பின் தங்கிவிடுகிறார்கள். ஒரு சமுதாயத்தின் முன்னேற்றதிற்குக் கல்வி மிகவும் அவசியம். ஆங்கிலம் அதற்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உண்மையான ந�ோக்குடையதுதான் "மாலு மாலு லங்கா". அங்குள்ள மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வாசிப்பதற்கு எளிய வகையில் உள்ள புத்தகங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள பள்ளிகளுக்கு வழங்கினார்கள். அத�ோடு, அவர்களுக்கு ஆங்கில அகராதியைப் பயன்படுத்துவதற்கும் கற்றுக்கொடுத்தனர். அங்குள்ள மாணவர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தை அவர்கள் உருவாக்கியதன் மூலம், பட்டறை முடிந்த பின்பும் த�ொடர்ச்சியாக அவர்களின் ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ள முடிந்தது. மாலு மாலு லங்கா 2013 இலங்கையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்கள் நிறைந்த மட்டக்களப்பு என்ற மாநிலத்தில் ப�ோரினால் பாதிக்கப்பட்ட மாணவர் களின் அவல நிலையை அகற்ற, கல்வி உதவி வழங்கும் ந�ோக்கில் உருவானது, "மாலு மாலு லங்கா" எனும் திட்டம். 2011ம் ஆண்டில் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 25 பேர் ஆண்டுத�ோறும் இரண்டரை வாரங்களுக்கு இலங்கைக்குச் சென்று, அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணினி ஆற்றலை மேம்படுத்த பட்டறையை நடத்துகிறார்கள். "ஏ-நிலை" தேர்வுகளைத் தமிழிலேயேச் செய்யும் இவ்வட்டார மாணவர்கள், ஆங்கிலத்தை ஆங்கில வகுப்பில் மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு ஆங்கில ம�ொழியாற்றல் 86 NUS Tamil Language Society 35th Executive Committee இந்திய சமூகத்தைக் கல்வி வாயிலாக மேம்படுத்துவது சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ந�ோக்கங்களில் ஒன்றாகும். அதைப் ப�ோல இலங்கையிலுள்ள தமிழ் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது "மாலு மாலு லங்கா" திட்டத்தின் ந�ோக்கமாகும். இவ்வாறு தமிழ்ப் பேரவையின் ந�ோக்கமும் "மாலு மாலு லங்கா" திட்டத்தின் ந�ோக்கமும் ஒன்றிணைந்து இருப்பதே தமிழ்ப் பேரவை இத்திட்டத்தை அங்கீகரிக்க முக்கிய காரணமாகும். சிங்கப்பூரில் தமிழ்ப் பேரவை ஆற்றிவரும் சேவையை, வெளிநாட்டில், அதுவும் வசதி குறைந்த, தேவைகள் அதிகமுள்ள பகுதியில் ஆற்றக்கூடிய வாய்ப்பை இத்திட்டம் தந்துள்ளது. அமைதி நிறைந்த நாட்டில் எவ்வித தடையுமின்றி வாழக்கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கிற�ோம். இவ்வாறான சமூக சேவை, நமக்கு பிறரது வாழ்வில் ஒளியூட்டக்கூடிய சக்தியையும் மன திருப்தியையும் நமக்கு அளிக்கிறது. இந்த உன்னத சேவைக்குத் தமிழ்ப் பேரவை என்றென்றும் ஆதரவை வழங்கும் என்பதில் ஐயமில்லை.