எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 81

விளையாட்டு விழா 2014 Sports Spectra 2014 ஆண்டுத�ோறும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையால் நடத்தப்பட்டு வரும் "ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா" (எ) விளையாட்டு விழாவின் முக்கிய ந�ோக்கம், சிங்கப்பூர் இந்திய இளையர்களை ஒன்று சேர்த்து, அவர்களுள் நட்புறவை வளர்ப்பதேயாகும். அதுமட்டுமின்றி, இந்திய இளையர்களிடையே ஆர�ோக்கிய வா ழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு தளமாகவும் இவ்விழா அமைகிறது. இந்த ஆண்டு இதுவரை நடைபெறாத அளவில் விளையாட்டு விழா க�ோலாகலமாக சனிக்கிழமை பிப்ரவரி 8ம் தேதி அன்று நடந்தேறியது. ப ல ்க ல ை க ்க ழ க த் தி ன் விளையாட்டு மற்றும் ப�ொழுதுப�ோக்கு மையத்தில் நடத்தப்பட்ட இவ்விழா, இம்முறை உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்குபெறலாம் என்ற நிபந்தனையை தகர்த்தி, இந்திய இளையர்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு விழாவாக அமைக்கப்பட்டது. இதனால், இவ்வாண்டு, இவ்விழாவிற்கு மேலும் பெருமளவில் ஆதரவு கிடைத்தது. ஆண்களுக்கு ப�ோட்டியும் கேப்டன்ஸ் பந்து Ball) ப�ோட்டியும் காற்பந்தாட்ட பெண்களுக்கு (Captains’s நடைபெற்றது. இம்முறை முப்பத்தி இரண்டு காற்பந்து குழுக்களும் பதினைந்து "கேப்டன்ஸ் பந்து" குழுக்களும் பங்கேற்றது ஒரு சாதனையாக அமைந்தது. சுமார் நானூற்றிற்கும் மேற்பட்ட இந்திய இளையர்கள் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர். இத்தருணத்தில், இவ்விழாவில் கடந்த ஒன்பது வருடங்களாக நடந்துக�ொண்டிருக்கும் பிரேம் குமார் சவால் கிண்ணமும் இம்முறை சிறப்பாக நடந்தது பங்குபெற்று இந்த வெற்றிகரமான நிகழ்வுக்குக் காரணமான அனைத்து இளையர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிற�ோம். இவ்வாண்டு காற்பந்தாட்டப் பிரிவில் "Rojak Ninos" என்ற குழுவும் கேப்டன்ஸ் பந்து பிரிவில் "Republica Girlz" என்ற குழுவும் வெற்றிபெற்றனர். இந்த வருடமும் வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. காற்பந்து பிரிவு வெற்றியாளர்களுக்கு $300 வெள்ளி ர�ொக்கமும் "கேப்டன்ஸ் பந்து" பிரிவு வெற்றியாளர்களுக்கு $200 வெள்ளி ர�ொக்கமும் வழங்கப்பட்டது. சிறந்த ஆண் விளையாட்டராக S. விக்ரமும் சிறந்த பெண் விளையாட்டாளராக சுஹர்னாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். "பிரேம் குமார்" சவால் கிண்ணம் கடந்த ஒன்பது வருடங்களாக நடந்துக�ொண்டிருக்கும் பிரேம் குமார் சவால் கிண்ணமும் இம்முறை சிறப்பாக நடந்தது. தமிழ்ப் பேரவையில் துணைத் தலைவராக இருந்தப�ோது நம்மைவிட்டு மறைந்த திரு பிரேம் குமார் அவர்களின் நினைவாக இ்ந்த சவால் முன்னாள் மாணவர்களுக்கும் தற்போதிய மாணவர்களுக்கும் நிகழும் ப�ோட்டியில், இவ்வாண்டு நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் முறையாக நமது தற்போதிய மாணவர்கள் சவால் கிண்ணத்தைக் கைப்பற்றினர். இவ்வாண்டு "ஸபெக்டரா கார்னிவல்" (Spectra Carnival) என்னும் புதிய முயற்சியும் இந்த விழாவுடன் நடத்தப்பட்டது. சமூக ஈடுபாட்டு திட்டம் (Community Engagement Programme) என்னும் ஒருங்கிணைப்பின் வாயிலாக இம்முயற்சியில் NUS Malay Language Societyயும் NUS Muslim Societyயும் சேர்ந்து ஒரு சிறிய கேளிக்கைச் சந்தையை நடத்தின�ோம். தமிழ் இளையர்கள் மட்டுமல்லாமல் மற்ற இன இளையர்களையும் இணைக்க இம்முயற்சி கைக�ொடுத்தது. சி