எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 78

சிங்கப்பூர் இந்தியர் கல்வி மேம்பாட்டிற்கு 1991ம் ஆண்டு த�ொடங்கப்பட்ட சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு கழகம் (சிண்டா), இன்று பல மாற்றங்கள் கண்டு இருபதாம் ஆண்டையும் தாண்டி வந்துக்கொண்டிருக்கிறது. கடந்த 23 ஆண்டுகளில், இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு சிண்டா பெருமளவில் பங்காற்றியுள்ளது. அவர்களின் கல்வி மற்றும் ப�ொருளியல் நிலைமையை உயர்த்தும் ந�ோக்கத்தில் இந்த சுயஉதவி அமைப்பு துவங்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு, சிண்டாவின் 20ம் ஆண்டு நிறைவைய�ொட்டி அதன் மறுபரிசீலனை ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதிலிருந்து இந்திய சமூகத்தின் வளர்ச்சியும் இனி சிண்டா செல்லவிருக்கும் திசையையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. 'சிண்டா 2020: புதிய உத்வேகம்' என்ற அறிக்கை இந்திய சமூகத்தின் கல்வித் தரத்தையே முக்கிய அம்சமாக வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ளது. திரு த. ராஜசேகர் அவர்கள் சிண்டாவின் தலைமை நிற்வாகியாக ப�ொறுப்பேற்று, இந்த அறிக்கையை உருவாக்குவதே தன் தலையாய பணியாக எடுத்துச்செய்தார். அத�ோடு தன் ஐந்தாண்டு தலைமைத்துவத்தில் சிண்டாவின் கட்டமைப்பை மாற்றி, சமூகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை உற்றுந�ோக்க நம் பங்கு உறுதிக�ொண்டார். தன் சிறந்த தலைமைத்துவத்தில் வலுவான அமைப்பாக சிண்டாவை மாற்றியமைத்துள்ளார். அவரின் தலைமைத்துவத்தில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை நடத்தும் 'சாதனா' துணைப்பாட வகுப்புத் திட்டமும் பல வகையில் வளர்ச்சிக்கண்டது. மிக முக்கியமாக, 'சாதனா' திட்டத்தில் சேரும் த�ொடக்கக் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவேண்டும் என்ற உறுதியுடன் "சாதனா"விற்கு தன் தனி கவனத்தைச் செலுத்தினார். மாணவர்களுக்கு கல்வி பயில நல்ல இடத்தை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டார். சிண்டாவின் தலைமை நிர்வாகியாக இருந்தாலும் தமிழ்ப் பேரவை உறுப்பினர்கள�ோடு தானும் ஒரு மாணவராக பழகும் இயல்புடையவர். இவ்வாண்டு ஜுன் மாதம் 30ம் தேதிய�ோடு தன் தலைமை நிர்வாகி ப�ொறுப்பிலிருந்து விலகுகிறார். அவரின் சேவைக்கு தமிழ்ப் பேரவை தனது நெஞ்சார்ந் த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தருணத்தில் ஜுலாய் மாதத்திலிருந்து அப்பொறுப்பை எற்கவிருக்கும் திரு குமரன் பரதன் அவர்களை அன்பான நல்வாழ்த்துகள�ோடு வரவேற்கிற�ோம். அவருடைய அனுபவமும் ஆற்றலும் சிண்டாவை புதிய உத்வேகத்தில் எடுத்துச்செல்லும் என்று நம்புகிற�ோம். தமிழ்ப் பேரவையும் சிண்டாவும் அணுக்கமான உறவை க�ொண்ட அமைப்புகள். இந்திய சமூகத்தின் கல்வி சார்ந்த வளர்ச்சியில் அக்கறை க�ொண்ட அமைப்புகள் இவை. வருங்காலத்தில் இன்னும் பல வழிகளில் தமிழ்ப் பேரவையும் சிண்டாவும் இணைந்து இந்திய சமூகத்தின் கல்வி தரத்தை மேம்படுத்த முயற்சி எடுக்க நாங்கள் தயாராக இருக்கிற�ோம். 76 NUS Tamil Language Society 35th Executive Committee