எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 75

சாதனா 2014 சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் சாதனா துணைப்பாட திட்டம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் கழகம் (SINDA) மற்றும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை (SIET) ஆகிய அமைப்புகளின் பெரும் ஆதரவால் நடைப்பெற்று வருகிறது. சாதனா துணைப்பாட வகுப்புத்திட்டம், ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்டு, த�ொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குச் சிறப்பான சேவையை அளித்து வருகிறது. 1984ல் துவங்கிய இத்திட்டம், ஆண்டுத�ோறும் வெற்றிகரமாக நடைபெற்று, கடந்த ஆண்டு சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் 9வது மாணவர் சாதனையாளர் விருதில், தங்க விருதைப் பெற்றது. த�ொடக்கக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள், தங்களின் மேல்நிலைத் தேர்வில் (GCE "A" Levels) சிறப்பாக தேர்ச்சி பெற்று, பல்கலைக்கழகங்களில் தங்களுக்கு விருப்பமான பட்டக் கல்வியைப் பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் க�ொடுப்பதே சாதனா திட்டத்தின் தலையாய ந�ோக்கமாகும். அதற்கான வழியை எளிதாக்கி, பல மாணவர்களுக்கு உதவ வேண்டுமென்பதற்காகவே இத்திட்டத்தை ஆண்டாண்டாக நடத்தி வருகிற�ோம். மேலும், கல்விக்கு எவ்வித காரணங்களும் தடையாக இருக்கக்கூடாது என்பதே இத்திட்டத்தின் உறுதியாகும். எனவே, இச்சிறந்த திட்டம், மிகக் குறைவான கட்டணத்தில், பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக் க�ொண்டு நடத்தப்பட்டு வருகிறது. திரு மணிமாறன், திரு ஆசைத்தம்பி, திரு சுவா மற்றும் பல தகுதியான ஆசிரியர்கள் சாதனாவில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுப்பத�ோடு த�ொடர்ந்து ஊக்கமும் அளித்து வருகின்றனர். தமிழ்ப் பேரவையின் சேவை அதன் ந�ோக்கத்தை அடைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. இதுவரை, சுமார் 120 மாணவர்கள் சாதனா திட்டத்தில் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு சாதனா திட்டத்தில் பயின்ற முதல் ஆண்டு மாணவர்களில், 86 விழுக்காட்டினர் ஒரு படித்தரம் (grade) முன்னேற்றம் பெற்றனர். இரண்டாம் ஆண்டு மாணவர்களில் 50 விழுக்காட்டினர் மேல்நிலை தேர்வில், இரண்டிற்கும் மேல் படித்தரம் முன்னேற்றம் பெற்றனர். மேலும், பல மாணவர்களுக்குச் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களுக்குச் சேர்ந்து பயில வாய்ப்பு கிட்டியுள்ளது. இதுவே, சாதனாவின் வெற்றிக்கான அடையாளமாகும். இத்திட்டத்தில் ப�ொதுத் தாள் (General Paper), கணக்கு சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 35ம் செயற்குழு 73