எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 68

ஆய்வுக்கட்டுரைப் படைப்பாளர்கள் | P A P E R P R E S E N T E R S மாற்றங்களை எதிற்கொள்ளும் சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் Passively Active, Actively Passive but Actively Active - Singaporean Tamil Youth Leading Language Change திரு ஃபாரிஸ் ரிஸ்வான் Mr Faris Ridzuan Year 3, Sociology National University of Singapore The Tamil language has been unfairly seen as being in the decline because of a fallacious determinism. For example, one may think of mastering a language as being a deterministic factor in accruing positive returns. On the other hand, learning a “wrong” language may be negative or at best, non-contributory to one’s success. This obscures the negotiations and constructions that necessarily occur because of the “loudness” of mainstream discourses of “language determinism”. In providing a different construction of the negotiation of youth with the Tamil language in the context of MOE school curriculum, I hope to bring back agency to the speakers of that language, by focusing on how the structural variables in Singapore, often depicted as constraining per se, also enabled Tamil Youth to be conscious of their “selves” as affected by conflicting discourses about the Tamil language and how their investment in it inadvertently provides a certain kind of agentic vibrancy. 66 NUS Tamil Language Society 35th Executive Committee சிங்கப்பூரில் தமிழ்மொழியின் புழக்கம் பெரிதளவு குறைந்து வருகிறது என்ற ப�ொதுவான கருத்தும் இக்கால வாழக்கைமுறைக்குத் தமிழ் ம�ொழி ப�ொருத்தமன்று என்ற எண்ணமும் சமீப காலமாக பலரிடையே நிலவிவருகிறது. மேலும், கல்வி மேம்பாட்டுக்கு எழுத்துத் தமிழே பெரிதளவு உதவுகிறது என்றும் இங்கு பலரால் நம்பப்படுகிறது. பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் உள்ள வேறுபாட்டினைப் பள்ளிகள் மேலும் வலியுருத்தி இவ்விருவகைத் தமிழுக்கும் உள்ள இடைவேளியை அதிகரிக்கின்றன. தமிழ் ம�ொழியின் புழக்கம் பேச்சிலும் எழுத்திலும் குறைந்து வருகிறது என்ற கருத்தை அவ்விரண்டிற்கும் உள்ள த�ொடர்பு மங்கி வருவதே காரணம் என்று கூறுவது சரியன்று என்பதை ஆராய்ந்தறிய உள்ளது என்னுடைய ஆய்வுக்கட்டுரை. என்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தமிழ் ம�ொழிப் புழக்கம் குறைந்ததற்கு அம்மொழியின் அமைப்பை மாற்றியமைக்கவல்ல. சமூக வரலாற்றுக் காரணிகளே வித்திட்டுள்ளன என்பதை விவாதிக்க உள்ளேன். பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள வேறுபாடே பேச்சுத் தமிழ் அரசியல் சட்டங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கக் காரணமாக இருந்து வருகிறது. பேச்சுத் தமிழின் வழி மக்களிடையே வேறுபாடுகள் குறைகிறது. மாறாக, எழுத்துத்தமிழைக் கற்றவருக்கும் மற்றவருக்கும் உள்ள இடைவேளியை அதிகரிக்கிறது. இதுவே பேச்சுத் தமிழின் மகத்துவத்தைப் ப�ோற்றக் காரணமாய் அமைகிறது. சிங்கை இந்தியர்களின் ம�ொழியான தமிழ் ம�ொழியை நிர்ணயித்த அரசியல் சட்டம் பள்ளிகளில் எழுத்துத் தமிழை மட்டுமே கற்பிக்கக் காரணமாக அமைந்தது. ஆனால், பள்ளிகளில் பேச்சுத் தமிழைக் க�ொண்டுவருவதன் மூலம் பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள இடைவேளி குறையக் கூடும். மேலும், சமூகம் மற்றும் வரலாற்றுக் காரணிகளால் பேச்சுத் தமிழின் இன்றியமையாத தன்மையை மறந்த இன்றைய இளையர்கள், இதன்வழி பேச்சுத் தமிழையும் எழுத்துத் தமிழையும் ஒரே கண்னோட்டத்தில் காண முயல்வர். தமிழ் ம�ொழியைப் பேசுபவர் அம்மொழியின் இருவேறு அமைப்பை உணர்வதன் வழி அவ்விரு அமைப்பின் ஒற்றுமையைக் கண்டறிய இயலும். அதன்மூலம் மட்டுமே எழுத்துக்கும் அப்பாற்பட்ட நம் தமிழ் ம�ொழியின் அழகைக் கண்டறிய முடியும்.