எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 60

ஆய்வுக்கட்டுரைப் படைப்பாளர்கள் | P A P E R P R E S E N T E R S அனிருத்தா? ஆத்திசூடியா? நமது தமிழ் அடையாளம் என்ன? Anirudh Versus Aathichudi: Who Says We Are Tamil திரு குணாளன் மன�ோகரா Mr Kunalan Manokara Year 3, Psychology and History Nanyang Technological University தகவல் த�ொடர்பு சாதனம் என்பது உலகளவில் இன்றைய இளையர்களின் அடையாளத்தின் மீது ஒரு பெரிய ஆதிக்கத்தை க�ொண்டுள்ளது. தமிழ் சமூதாயமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சிங்கப்பூரில் "க�ோலிவுட்" என்ற தமிழ்த் திரை உலகமும் உள்ளூர் தமிழ் தயாரிப்புகளும் தமிழ் இளையர்களின் அடையாளத்தின் மேல் தாக்கத்திலிருந்து இதை நாம் அறியலாம். இக்கட்டுரை தகவல் த�ொடர்பு சாதனம் எந்த அளவிற்கு தமிழ் அடையாளத்திற்கு ஒரு குறியீடாக அமைகிறது என்பதை ஆராயும். பழங்காலத்துத் தமிழ் கலாச்சார அடையாளங்களுடன் இன்றைய தகவல் சாதனங்களை ஒப்பிடும்போது, இன்றைய சிங்கப்பூர் தமிழ் இளையரின் அடையா ள கூறுகளைப்பற்றி அறிந்து க�ொள்ளலாம். இந்த ஒப்பிடுதலுக்கு சமூக உளவியலின் அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் இளையர்களின் சுய அடையாளம், மன�ோவியல் உத்திகளின் வாயிலாக கணக்கெடுக்கப்படும். இந்த ஆய்வின் குறிக்கோளுக்காக இரண்டு உத்திகளை கையாண்டுள்ளேன். ஒன்று: ஆழ்மனப் பதிவு இயந்திரம். இரண்டு: அடையாள வினாக்கள். Social psychology is my area of interest, and I have been working as a research assistant in this field for the past 2 years. Specifically, I have been involved in projects dealing with cross-cultural differences in psychology, knowledge that can be applied to the domain of Singaporean Tamils as well. The case of Singapore is especially unique, because the cultural influences that impact us stem from both the local context as well as mainland Tamil Nadu. Mass media presents the most explicit example for us to understand and analyze the culturally ambiguous, or dichotomous depending on your viewpoint, Singapore Tamil identity. This was my research topic for WTUYC 2012, and for this conference, I am presenting a paper that extends on my previous findings. In particular, I deal with the Tamil Linguistic Identity from the viewpoint of an aspiring Social Psychologist, hoping to adumbrate on why we speak our language the way we do. 58 NUS Tamil Language Society 35th Executive Committee ஆழ்மனப் பதிவு இயந்திரம் என்பது கணினிமயமாக்கப்பட்ட ஒரு பிரித்தல் பயிற்சி. இது ஒருவர் எந்த அளவிற்கு சில விஷயங்களை ஆழ்மனதில் ஒருங்கினைகின்றார் என்பதை அளவெடுக்கும். பங்கேற்பாளர்கள் "திருவள்ளுவர்" அல்லது "தனுஷ்" ப�ோன்ற வார்த்தைகளைக் "கலாச்சாரம்" மற்றும் "தகவல் சாதனம்" ஆகிய பிரிவுகளில் சேர்க்க வேண்டும். இதை அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டும். பங்கேற்பாளர் எடுக்கும் நேரம் குறித்துக்கொள்ளப்படும். இந்த முடிவுகளை ஆராய்ந்து கலாச்சாரமும் தகவல் த�ொடர்பு சாதனமும் எந்த அளவில் ஒருவரின் சுய அடையாளத்திற்கு பங்கு அளிக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளலாம். அடையாள வினாக்கள் என்பவை சுய அடையாளத்தின் வெளிப்படையான அளவுக்கோல் ஆகும். பங்கேற்பாளர்கள் தாங்கள் ஏன் தமிழர்கள் என்று நினைக்கிறார்கள் என்பதற்கு 20 காரணங்களைத் எழுதுவர். இவ்வினாக்கள் "நான் ஏன் தமிழனென்றால்" என்று த�ொடங்கும். முன்பே தீர்மானிக்கப்பட்ட த�ொகுப்புகளில் இந்த பதில்கள் வகைப்படுத்தப்படும். இதன் வாயிலாக பண்பாடு மற்றும் தகவல் சாதனங்களின் அடையாளத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அறியலாம். கலாச்சாரப் பாரம்பரியம், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் அடையாளத்திற்கு தகவல் த�ொடர்பு சாதனத்தைவிட பெரும் பங்கு ஆற்றுகிறது என்பது என் கணிப்பு. வரலாற்றின் அடிப்படையிலும் சமூகவியலின் அடிப்படையிலும் இக்கணிப்பு வழங்கப்படுகிறது. பாரம்பரிய அடையாள சிண்ணங்களை தகவல் த�ொடார்பு சிண்ணங்களுடன் சேர்த்துக் காணும்போது தமிழ் உயிர் வாழ்வதற்கு எவை முக்கியம் என்பதை புரிந்துக்கொள்ளலாம், தமிழின் எதிர்காலத்தை அறிவியல்பூர்வமாக செதுக்கலாம்.