எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 50

ஆய்வுக்கட்டுரைப் படைப்பாளர்கள் | P A P E R P R E S E N T E R S "தக்க தக்கிட கூத்து" - துடிப்பு மிக்க சிங்கப்பூரில் இளமை ததும்பும் தமிழின் வெளிப்பாடான கலைத்துறை Thakka Thakkida Koothu - Perfor mance as a Carrier of Youthful Tamil in Vibrant Singapore திரு நல்லு தினகரன் Mr Nallu Dhinakharan PGDE (Sec), Geography National Institute of Education ஒரு சமூகத்தையும் அதன் வாழ்வியலையும் வடிவமைக்கும் தலையாய பணி கலைகளுக்கு உண்டு என்பதே எனது வாதமாகும். தமிழ் கலையிலும் பண்பாட்டிலும் மிகுந்த ஆர்வம் க�ொண்ட எனக்கு பண்பாடு மற்றும் புவியியல் சார்ந்த ஒர் ஆய்வை நடத்த வேண்டும் என்ற வேட்கை ஏற்பட்டது. அதாவது, எப்படி கலைகள் மூலம் தமிழ் பண்பாட்டை சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களிடம் சேர்ப்பது என்பதுதான் எனது ஆய்வின் சாராம்சமாகும். இதைப் பற்றி மேலும் ஆய்வு செய்ய பரதநாட்டியம் மற்றும் தமிழ் மேடை நாடகங்களை என் ஆய்வுத் தளமாக தேர்ந்தெடுத்தேன். இந்த ஆய்வின் மூலம் கலைகளுக்கும் தமிழ் பண்பாட்டிற்குமிடையே உள்ள உறவை கண்டறிவத�ோடு அவ்வுறவு எப்படி பல பண்பாட்டினர் வாழும் சிங்கப்பூரில் உள்ள தமிழ் பேசும் இளையர்களைப் பாதிக்கின்றது என்பதை அறிய உள்ளேன். எனது ஆய்வுக்கட்டுரை பண்பாடு புவியியல் என்ற துறையை அடிப்படையாக க�ொண்டுள்ளது. இந்தத் துறையின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் தமிழ் மாநாடு ஆய்வுக்கட்டுரை இக்கட்டுரையே ஆகும். இக்கட்டுரையில் கலை, பண்பாடு, புலம்பெயர்ப்பு ப�ோன்ற க�ோட்பாடுகளின் அடிப்படையில் எப்படி பரதமும் மேடை நாடகங்களும் அமைகின்றன என்பதையும் நான் அலசி ஆராய உள்ளேன். இவ்வாய்வுக் கட்டுரை வருங்காலத்தில் பரதநாட்டியம் பற்றியும் மேடை நாடகங்கள் பற்றியும் ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், இந்த ஆய்விற்கான ஆய்வு முறையும் வித்தியாசமாக அமைந்தது. அவ்விரு கலைகள் பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள அத்துறையில் உள்ள ஜாம்பவான்களிடம் ஆல�ோசித்தத�ோடு அல்லாமல் நானும் அக்கலைகளில் ஈடுபட்டேன். இந்த ஆய்வின் முடிவுபடி, தமிழ் பேசும் இளையர்கள் இக்கலைகள் மூலம் தமிழ் பண்பாட்டைக் கற்றுக்கொள்வத�ோடு சிங்கப்பூரில் உள்ள மற்ற இன பண்பாடுகளையும் கற்றுக்கொண்டு சிங்கப்பூரின் பல இன சமுதாயத்தின் அடையாளத்தைக் கட்டிக் காக்கின்றனர். I chose to write on this topic as I felt that this was a perfect time for me to capitalise on the sudden surge in popularity of Tamil stage dramas and to study this sudden surge in especially new theatre goers has encouraged me to study this phenomenon geographically in the way Tamil culture is being represented in these performance spaces. Bharathanatyam also serves to be another avenue for this study. And as an ‘insider’ in the field of arts and culture myself, I felt that my research positionality will be able to offer an interesting perspective into this topic. 48 NUS Tamil Language Society 35th Executive Committee இந்த ஆய்வை நடத்த இதுவே சரியான தருணம். ஏனெனில், சமீப காலத்தில் தமிழ் மேடை நாடகங்களில் ஈடுபடும் தமிழ் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், பல இளையர்கள் தமிழ் மேடை நாடகங்களைப் பார்க்கவும் செய்கின்றனர். இவையே, இந்த ஆய்வை எடுத்து நடத்த ஊக்கமளித்தன. பரதமும் என் ஆய்வுக்கு ஒரு நல்ல தளமாக அமைந்தது. மேலும், நான் கலை துறையில் ஈடுபட்டுள்ளதால் என்னால் கலைப் பற்றி மாறுபட்ட க�ோணத்தை வழங்க முடியும் என்று நான் ந