எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 33

ஏற்பாட்டுக் குழு துணைத் தலைவர் செய்தி அனைவருக்கும் வணக்கம். சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 35ம் செயற்குழுவின் இந்த ஆண்டின் பிரம்மாண்ட படைப்பான சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014-கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். தரணியெங்கும் வீற்றிருக்கும் தமிழ் அன்னைக்கு அரியணை அளித்த சிறப்பு நம் சிங்கை நாட்டிற்கு சேரும். தென்கிழக்கு ஆசியாவிலேயே சிங்கப்பூரில் மட்டும்தான் தமிழ் அதிகாரத்துவ ம�ொழியாக விளங்குகிறது. மேலும், இங்கு நாம் அனைவரும் தமிழுக்கு விழா எடுத்து க�ொண்டாடுகிற�ோம் தமிழின் முக்கியத்துவத்தை அறிகிற�ோம். நான் சமீபத்தில் தமிழகத்திற்குச் சென்றிருந்தப�ோது, அங்கு ஒரு நண்பர் சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் உள்ள தமிழர்களை விட அழகாக தமிழ் பேசுகின்றனர் என கூறியப�ோது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இப்படி சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் ஓர் அழகிய பந்தம் இன்றுவரை த�ொடர்ந்துக�ொண்டு வருகிறது, இனியும் த�ொடரும். தமிழ் ம�ொழியின் அழகே அது காலத்திற்கு ஏற்றதுப�ோல் ப�ொருந்தி இருப்பதுதான். தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து இன்று அனிருதின் காலம் வரை தமிழ் வாழ்ந்துக�ொண்டுதான் வருகிறது. தமிழ் எங்குதான் இல்லை? தகவல் சாதனங்களில், ஊடகங்களில், வழிப்பாட்டு தளங்களில், விஞ்ஞானத்தில், த�ொழில்நுட்பத்தில், குடும்பங்களில் என ச�ொல்லிக்கொண்டே ப�ோகலாம். என்னை ப�ொருத்தவரை என்றும் காலத்திற்கு ஏற்றதுப�ோல் இளமையுடன் வாழ்ந்து வரும் தமிழ் ம�ொழி ஒரு மார்கண்டேயனே ! இம்மாநாட்டின் முக்கிய ந�ோக்கமே இன்றைய இளையர்கள் காலத்திற்கு ஏற்ப வாழும் தமிழை எப்படி தங்கள் "உலகில்" பயன்படுத்தலாம் என்பதே ஆகும். இதற்கு என் அனுபவங்களும் ஆதாரங்களாக அமைந்தன. வட இந்திய ம�ொழியைத் தாய்மொழியாக க�ொண்ட எனக்குத் தமிழைப் பற்றி த�ொடக்கத்தில் ஒன்றும் தெரியாது. அப்போது பள்ளியில் இரண்டாம் ம�ொழியாக தமிழைக் கற்க வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. எதையும் பிடித்து செய்ய வேண்டும் என்ற என் க�ொள்கைக்கு ஏற்ப நான் எனக்குப் பிடித்த ஊடகங்கள் வழி தமிழை சுவாரசியமான முறையில் கற்க ஆரம்பித்தேன், என து ஆசிரியர்களும் எனக்கு ஊக்கத்தை அளித்தனர். தமிழைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்த எனக்கு இன்று தமிழ் சரளமாக வருகிறது. ஆனால், இன்று பல இளையர்கள் தமிழைத் தாய்மொழியாகக் க�ொண்டும் தமிழில் எழுதவும் பேசவும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அன்றாட வாழ்வில் தமிழை இலகுவாகப் பேச ஊக்கமளிக்கவும் ஒரு தளம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. த�ொடக்கக் கல்லூரி காலத்திலிருந்து நானும் என்னுடைய நெருங்கிய நண்பரும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 35ம் செயற்குழுவின் தலைவருமான திரு இர்ஷாத் முஹம்மதும் இணைந்து தமிழ் சார்ந்த பல திட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் செயல்பட்டுள்ளோம். தமிழ்ப் பேரவையிலும் நாம் இருவரும் இணைந்து செயல்படும் வாய்ப்பும் கிடைத்தது. இருவருக்கும் இதே எண்ணம் இருந்ததால், நாம் நம் செயற்குழுவ�ோடு சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014-கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தோம். எங்களின் பல மாத கால உழைப்பினை இன்று உங்களிடம் சமர்ப்பிக்கிற�ோம். இத்தருணத்தில் அயராது உழைத்து மனம் தளராமல் செயல்பட்ட 35ம் செயற்குழுவுக்கும், ஆதரவாளர்களுக்கும், தமிழ்ப் பேரவையின் முன்னாள் செயற்குழு உறுப்பினர்களுக்கும், சமூக தலைவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும், எங்களின் மேல் நம்பிக்கைக�ொண்ட நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. முக்கியமாக, எனக்குப் பக்கபலமாக உள்ள என் அம்மாவிற்கும், குடும்பத்திற்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் நன்றி. அன்பு கலந்த வணக்கத்துடன் சையத் அஷரத்துல்லா ஏற்பாட்டுக் குழு துணைத் தலைவர் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014