எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 32

ஏற்பாட்டுக் குழு தலைவர் செய்தி சிங்கப்பூரில் இளையர்களிடையே இம்மொழியின் புழக்கத்தை அதிகரிக்க தமிழ்ப் பேரவை கடந்த 39 ஆண்டுகளாக அயராத முயற்சியை எடுத்து வருகிறது. அதன் அடுத்த மைல்கல், இந்த சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014. உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்று பல தமிழ் மாநாடுகளைக் கண்டு, நாம் ஏன் தமிழ் இளையர்களுக்காக ஒரு மாநாடை நடத்தக்கூடாது என எண்ணி உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாட்டை நடத்திய அமைப்பைச் சார்ந்தவர்கள் நாங்கள். 2012ல் ஒருங்கிணைந்த அம்மாநாட்டிற்குப் பின், இந்த 2014ம் ஆண்டு நம் நாட்டைப் பற்றியும் அதன் தமிழ் வரலாற்றுப் பெருமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற உறுதிய�ோடும் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014 நடத்தவேண்டும் என்று திட்டமிட்டோம். சிங்கப்பூரில் தமிழ் ம�ொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்ப் பேரவையின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பிற்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் தமிழ்ப் பேரவை அதன் ஆய்வரங்கை மாநாடு வடிவில் வழங்கிவருகிறது. இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஆல�ோசகர்கள், நிதியுதவி வழங்கிய ஆதரவாளர்கள், பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும், இம்மாநாடு சிறப்புற நிகழ சிறப்பு விருந்தினராக வருகைதரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு எஸ் ஆர் நாதன், சிறப்பு வரு