எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 30

சிறப்புக் கட்டுரை | F E A T U R E D A R T I C L E எதற்காகத் தமிழ்? WHY DO WE NEED TAMIL? திரு அருண் மகிழ்நன் சிறப்பு ஆய்வு ஆல�ோசகர் க�ொள்கை ஆய்வுக் கழகம் Mr Arun Mahizhnan Special Research Adviser Institute of Policy Studies தமிழ் வாழ்ந்தால் தமிழர்கள் வாழ்வார்கள் என்று எண்ணுவ�ோர் சிலர் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். தமிழர்கள் வாழ்ந்தால் தமிழ் வாழும் என்று வாதிடுவ�ோரும் இருக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையவை அல்ல. அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. மேலும் வாழ்க்கை அவ்வளவு எளிதான ஒன்றன்று. தமிழ் எங்கள் உயிர் என்று வாழும் ஒரு சிறிய பிரிவினரிடையே அம்மொழி சிறப்பாகவே வாழ்ந்து க�ொண்டிருக்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ப�ோன்றோர் இந்தப் பிரிவில் அடங்குவர். ஆனால் அவர்களது தமிழார்வமும் இலக்கிய ஈடுபாடும் சிங்கப்பூர்த் தமிழர்களின் ப�ொருளியல் நலனைய�ோ அரசியல் நலனைய�ோ மேம்படுத்தியிருப்பதற்கான ஆதாரம் அதிகம் கிடையாது. அதற்குக் காரணம், தமிழ் ம�ொழிக்குப் ப�ொருளியல் வலுவ�ோ அரசியல் வலுவ�ோ இல்லாததுதான். அதேப�ோன்று, சமுதாயத்தின் உயர் மட்டத்தில் நிறையத் தமிழர்கள் பல வழிகளில் முக்கியப் பங்காற்றி வளமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களில் பலர் தமிழ் ம�ொழிக்கோ, இலக்கியத்திற்கோ, பண்பாட்டிற்கோ எந்த விதத்திலும் உதவியிருப்பதற்கான ஆதாரம் இல்லை. அவர்களுடைய தமிழ் அடையாளத்தில் அதற்கெல்லாம் இடமில்லை. 28 NUS Tamil Language Society 35th Executive Committee ம�ொழியின் வளப்பத்திற்கும் இனத்தின் வளப்பத்திற்கும் அவ்வளவு எளிதாக ஒர் ஒட்டுறவை நாம் கற்பித்துவிட முடியாது. அதே நேரத்தில், ம�ொழியின் நலனுக்கோ இனத்தின் நலனுக்கோ உதவி செய்யாத எவரையும் தமிழ்த் துர�ோகி என்று குற்றம் சுமத்துவதும் முறையாகாது. ஒரு சமூகம் அதன் ம�ொழியை ஆழமாகவும் அகலமாகவும் பயன்படுத்தாவிட்டால் அந்த ம�ொழி நீண்ட காலம் வாழ முடியாது என்னும் கருத்து க�ொள்கை அளவிலும் நடைமுறையிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு ம�ொழியைப் ப�ொருள் ஈட்டுவதற்காக மட்டுமே கற்றுக் க�ொள்ளச் ச�ொல்லும் ப�ோக்கிற்கும், ம�ொழி நமது கலாசாரத்தின் அடையாளம் என்று ப�ோற்றிப் பாதுகாக்கும் ப�ோக்கிற்கும் நெடுதூரம். மேலும், ம�ொழி தங்கள் வா ழ்வின் முக்கிய அம்சம் என்று கருதுவ�ோருக்கு, அது வெறும் த�ொடர்புக் கருவி மட்டுமன்று. த�ொடர்புக்கு மட்டுமே ம�ொழி என்றிருந்தால், சிங்கப்பூரில் யாரும் தமிழ் கற்க அவசியமேயில்லை. ஆங்கிலமே ப�ோதும். ஆக அதிகமான�ோரைச் சென்றடைய அதுவே சரியான ம�ொழி. தமிழ் மட்டுமே தெரிந்த பெற்றோரிடமும் தாத்தா பாட்டியிடமும் பேசுவதற்காகவாவது இளைய தலைமுறை தமிழ் கற்க வேண்டும் என்று நாம் வாதிடலாம். ஆனால் அந்த வாதமும் வெகு விரையில் மரணித்துவிடும். த�ொடர்புக்கான சாதனம், ப�ொருளியலுக்கான கருவி என்னும் குறுகிய வட்டங்களுக்கு அப்பாற்பட்டது ம�ொழி. ஓர் இனத்தின் கலாசாரம், தத்துவம், சிந்தனை சிறந்த இலக்கியங்களைக் க�ொண்ட வெகுசில செம்மொழிகளுள் ஒன்று என்ற அடிப்படையில் தமிழ் ம�ொழி நமது வாழ்க்கைக்கு அழகியலைக் க�ொண்டு சேர்க்கிறது. ப�ோன்றவற்றின் வெளிப்பாடே ம�ொழி. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் த�ொன்மையான ம�ொழி என்பதால் தமிழ் ம�ொழி நமக்கு இன்றும் பயன்தரக்கூடிய பல வாழ்க்கை அனுபவங்களையும், அர்த்தங்களையும் தன்னகத்தே க�ொண்டுள்ளது. சுருங்கச் ச�ொன்னால், நமது வாழ்க்கைக்கு விவேகத்தைக் க�ொண்டு சேர்க்கிறது தமிழ்மொழி. இன்னொரு முக்கிய அம்சமும் ம�ொழிகளுக்கு உண்டு. அது ம�ொழியின் அழகியல் சார்ந்தது. இசையும் நடனமும் எவ்வாறு நமது உணர்வுகளுக்கு