எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 29

நிகழும் தமிழ் நிகழ்ச்சிகளுக்குச் சென்று நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் முதலிய கலை நிகழ்ச்சிகளைக் கேட்டின்புறலாம். ச�ொற்பொழிவுகளைக் கேட்பதன் வாயிலாகத் தமிழறிவும் பெறலாம். அடுத்துத் தமிழில் பேசுதல். நம் சிங்கையில் இப்போது தமிழ்பேசும் குடும்பங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதை நாம் உணருகிற�ோம். "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" எனவே ஒரு ம�ொழி என்றும் வாழும் ம�ொழியாக இருக்க நாம் அம்மொழியை இயன்ற ப�ோதெல்லாம் பேசுதல் வேண்டும். தமிழர்கள் இல்லங்களில் மட்டுமின்றி ஏனைய சந்திப்பு நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழில் பேசுதலை இளையர்கள் தங்கள் தலையாய கடமையாகக் க�ொள்ள வேண்டும். எளிய தமிழில் இயன்றவரை பிறம�ொழிக் கலப்பின்றிப் பேசுதல் சிறந்தது. தமிழ் ஒரு இரட்டை வழக்கும�ொழி. பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் என இருவழக்கு உண்டு. பேச்சுத் தமிழையே அதிகம் பயன்படுத்துதல் நல்லது. மேடைப்பேச்சு, கருத்தரங்கப் பேச்சு முதலியவற்றில் மட்டும் எழுத்துத் தமிழைப் பயன்படுத்தினால் ப�ோதும். மற்ற இடங்களில் கலை நிகழ்ச்சிகளில் பேச்சுத் தமிழுக்கே முதன்மை க�ொடுத்து ம�ொழிப் புழக்கத்தை மேல�ோங்கச் செய்தல் வேண்டும். படித்தல் திறன் அல்லது வாசிப்புத் திறன் அறிவைப் பெருக்கும் அரிய வாயில் அல்லவா? "கற்றனைத்து ஊறும் அறிவு" என்பார் வள்ளுவர். நம் சிங்கையில் தேசிய நூலகங்களில், பள்ளி, பல்கலைக் கழக நூலகங்களில் படிப்பதற்காக உங்கள் வரவை ந�ோக்கிப் பலவகை நூல்கள் காத்திருக்கின்றன. அவற்றைப் படிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டால் அங்கே தமிழ் நூல்கள் இருக்கும்