எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 28

சிறப்புக் கட்டுரை | F E A T U R E D A R T I C L E இளமை ததும்பும் தமிழ் டாக்டர் சுப. திண்ணப்பன் தெற்கு ஆசிய இயல்பிரிவு கலை, அறிவியல் புலம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் "தமிழ் எங்கள் இளமைக்குப் பால்" என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். த�ொண்ணூறாம் ஆண்டு அகவை கண்டு வாழும் கலைஞர் கருணாநிதி முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்குவதற்குரிய காரணம் கேட்டப�ோது "தமிழ்தான் என் இளமைக்குப் பால்" எனக் கூறினார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய திராவிடம�ொழிகளுள் பலவற்றை ஈன்ற தாயாகத் தமிழ் இலங்கினாலும் அதன் "சீரிளமைத் திறத்தை" வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறார் ம ன�ோ ன ்ம ணீ ய ஆசிரியராகிய சுந்தரனார். இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் ப�ோன்ற செம்மொழிகள் இன்று பேச்சு வழக்கில் இல்லாத சூழலில் மேற்கண்ட ம�ொழிகளைப் ப�ோலத் த�ொன்மை வாய்ந்த தமிழ் இன்று பேச்சிலும் எழுத்திலும் தவழும் இளமை குன்றாத ம�ொழியாக இ ரு ப்பத ா ல்தான் அதனைக் கன்னித்தமிழ் என்று அறிஞர்கள் அழைத்தனர். பழமைக்குப் பழைமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் பைந்தமிழை- இளமை ததும்பும் இன்றமிழை - நம் சிங்கையில் என்றும் வளமை குன்றாது வாழும் ம�ொழியாக்க இளையர்க்கேற்ற பணிகளை எடுத்து இயம்புவதே இச்சிறுகட்டுரையின் ந�ோக்கம். இன்று தமிழ் கூறும் நல்லுலகில் தமிழுக்கு அதிகாரத்துவ ம�ொழி எனும் அங்கீகாரத்தை அளித்துள்ள நாடு நம் சிங்கப்பூர். சிங்கப்பூரின் மக்கள் த�ொகையில் சிறுபான்மை இனமாகிய தமிழர்க்குக் 26 NUS Tamil Language Society 35th Executive Committee கிடைத்த நற்பேறு இது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் வாய்ப்பு, இரும�ொழிக் க�ொள்கை காரணமாகப் பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை தமிழ் கற்கும் வாய்ப்பு, நான்கு ம�ொழி அறிவிப்பு நிலையில் நம் தமிழ் பெறும் வாய்ப்பு, இந்தியர்களைப் பிரதிபலிக்கும் ம�ொழியாகத் தமிழ் இலங்கும்பேறு, ஆசியான் மட்டத்தில் தமிழ்மொழியைக் க�ொண்டு நிறுத்தும் உரிமை, நாணயத் தாளில் தமிழ், சீனம், மலாய், ஆங்கிலம் ப�ோன்ற ம�ொழிகளுக்குள்ள இலக்கியப் பரிசு ப�ோன்ற வாய்ப்பு, தமிழுக்கும் கிடைத்துள்ள தகுதி, வளர்தமிழ் இயக்கம் நடத்தும் ஒட்டும�ொத்த தமிழ்மொழி விழா முதலிய நல்ல வாய்ப்புகள் நம் சிங்கை அரசாங்கம் நல்குகிறது. இந்த வாய்ப்பினைவசதிகளை இளையர்கள் முதலில் தவறவிடாது நன்கு பயன்