எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 26

இதைப் புரிந்துக்கொண்ட தமிழ் மாணவர்கள் சிலர் சிங்கையில் தமிழை வாழ வைக்க, கடினமாக படித்து அன்றைய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர். அவர்கள் 1975ம் ஆண்டு தமிழ்ப் பேரவையை நிருவினர். இம்மாணவர்களின் செயலாற்றலால் நான்கே ஆண்டுகளில் பேரவைக்கு அதிகாரத்துவ மன்றம் என்ற அந்தஸ்து கிடைத்தத�ோடு தமிழைப் பற்றி சிங்கையில் பலரையும் சிந்திக்க செய்தது. அப்போது, பேரவைக்கு இரு முக்கிய குறிக்கோள்கள் இருந்தன. முதலாவதாக, இந்திய அல்லது தமிழியல் துறையைப் பல்கலைக்கழகத்தில் த�ொடங்குவது. அடுத்ததாக, தமிழுக்கு சிங்கை சமுதாயத்திலும் கல்வி கழகங்களிலும் உயரிய அந்தஸ்தை வழங்குவது. இவ்விரு குறிக்கோள்களை அடைய தமிழ்ப் பேரவை ஆய்வரங்குகளை நடத்த முடிவுச் செய்தது. தமிழ்ப் பேரவையின் முதல் ஆய்வரங்கு சிங்கப்பூரில் தமிழ் ம�ொழியும் தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் நடைபெற்றது. இவ்வாய்வரங்குக்குச் சிறப்பு பேச்சாளர்களாக முன்னாள் அதிபரும் அன்றைய தேசிய த�ொழிச் சங்க காங்கிரஸின் ப�ொதுச் செயலாளரான திரு சி. வி. தேவன் நாயர் அவர்களும் அன்சன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு பி. க�ோவிந்தசாமியும் பங்கேற்றனர். அந்த ஆய்வரங்கம் சிங்கப்பூரின் தமிழ் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப�ோகிறது என்ற உண்மை யாரும் அப்போது அறியவில்லை. தமிழ்ப் பேரவையின் முதல் ஆய்வரங்கம் திரு சி வி. தேவன் நாயரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆய்வரங்கில் கலந்துக�ொண்ட பிறகு அவர் இந்திய சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளின் மேல் அதிக கவனம் செலுத்த த�ொடங்கினார். முக்கியமாக 1978 முதல் 1982 வரை அவர் தமிழ் ம�ொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். திரு பி.க�ோவிந்தசாமி அவர்களும் 1978ல் அவர் இறைவனடி சேரும் வரை தமிழர்களிடையே ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபட்டார். தமிழர் பிரதிநிதித்துவ சபையை மேம்படுத்தவும் செய்தார். இவ்வாறு சிங்கப்பூர்த் தேசிய பல்கலைகழக தமிழ்ப் பேரவை, ஆண்டுத�ோறும் 24 NUS Tamil Language Society 35th Executive Committee சிங்கப்பூ ரில் தமிழை வளர்க்கவும் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அலசி ஆராயும் ஒரு தளமாகவும் அமைந்தது. அதனுடன், "தமிழ்ப் பேரவை" என்ற இதழையும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைகழகத் தமிழ்ப் பேரவை தயாரித்து வெளியிட்டது. இதனின் தாக்கம் நம் சிங்கப்பூர்த் தமிழ் சமுதாயத்திலும் எதிர�ொலித்தது. தமிழ்ப் பேரவையின் உறுப்பினர்கள் பலரும் பல்கலைக்கழக கல்வியை முடித்த பின் பல தமிழ் அமைப்புகளில் சேர்ந்து சமூகத்தில் தமிழுக்குத் த�ொண்டு புரிய ஆரம்பித்தனர். 1980களின் த�ொடக்க ஆண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து இந்திய அரசியல் தலைவர்களும் தமிழ்ப் பேரவையின் ஆய்வரங்கில் பங்கேற்றனர். அன்று சிங்கப்பூர்த் தேசிய பல்கலைகழகத் தமிழ்ப் பேரவை த�ொடங்கி வைத்த ஆய்வரங்கு 39 ஆண்டுகளுக்குப் பின்பு, இன்று கால சூழலுக்கு ஏற்ப சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2014க உருபெற்றுள்ளது. For the past 39 years, NUS Tamil Language Society (NUS TLS), along with promoting the use of the Tamil language, has successfully embarked on communityinvolvement projects. Most importantly, these projects have amassed much respect for NUS TLS among the In- dian community in Singapore. In 2012, NUS TLS had organised the World Tamil University Youth Conference (WTUYC 2012). This grand scale project garnered a very positive response from the Indian Community. Furthermore, WTUYC 2012 was presented an award at the 8th Students’ Achievement Awards 2013. Additionally, NUS TLS staged its biennial ‘Sangae Muzhangu’ 2013 at the stages of Esplanade-Theatres by the Bay to and through this, became the first ever Tamil theatre production in Singapore to be staged at the Esplanade. Following this, Saadhana ‘A’ Level Tuition Project received the Gold Award at the 9th Students’ Achievement Awards 2014. This served as an additional motivational factor for NUS