எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 25

தமிழ்ப் பேரவையின் 39 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட தமிழ்ப் பேரவை, தன்னுடைய தமிழ் பணியுடன் சமுதாய் சேவையையும் வெற்றிகரமாக ஆற்றிக்கொண்டு வருகிறது. முக்கியமாக, சென்ற ஆண்டுகளில் தமிழ்ப் பேரவையின் பல திட்டங்கள் நம் சிங்கப்பூர் இந்திய சமுதாயத்தை நம் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தது. 2012ம் ஆண்டு, நம் தமிழ்ப் பேரவை நடத்திய உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தத�ோடு ஏற்பாடு குழுவுக்கு 8ம் பல்கலைக்கழக மாணவ சாதனை விருதும் கிடைத்தது. மேலும், சிங்கையில் முதன்முறையாக ஒரு தமிழ் மேடை நாடகத்தை எஸ்பிளினேட் அரங்கில் மேடையேற்றிய பெருமையும் தமிழ்ப் பேரவையின் சங்கே முழங்கிற்கே சேரும். அத�ோடு, இந்த ஆண்டு தன்னுடைய 30ம் ஆண்டு விழாவைக் க�ொண்டாடும் சாதனா துணைப்பாட வகுப்பு திட்டம் சென்ற ஆண்டு 9ம் பல்கலைக்கழக மாணவ சாதனை விருது விழாவில் தங்க விருதை பெற்றது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு நடைபெற்ற "ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா" விளையாட்டு விழாவில் என்றும் இல்லாத அளவிற்கு பல குழுக்கள் பதிந்துக�ொண்டனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொள்ளவும் செய்தனர். இப்படி சிங்கப்பூர்த் தேசிய பல்கலைகழகத் தமிழ்ப் பேரவையின் வெற்றிகளை அடுக்கிக் க�ொண்டே செல்லலாம். இன்று பல திட்டங்களை செவ்வனே நடத்தி வரும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைகழகத் தமிழ்ப் பேரவை, அன்றைய அதன் நிர்மானத்திற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது தமிழின் மேல் உள்ள பற்றுதான் எனக் கூறினால் அது மிகையாகாது. சிங்கப்பூர்த் தேசிய பல்கலைகழகத