எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 22

பண்பாடு நிலைத்திருக்க 9 ஏப்ரல் 1977ல் நடந்த சிங்கப்பூர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் முதல் "சிங்கப்பூரில் தமிழ் ம�ொழியும் தமிழ் இலக்கியமும்" ஆய்வரங்கில், அன்றைய தேசிய த�ொழிற்சங்க காங்கிரஸின் ப�ொதுச் செயலாளர் திரு சி. வி. தேவன் நாயர் ஆற்றிய உரையிலிருந்து... சி.வி. தேவன் நாயர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் மாண்டரின், தமிழ், மலாய் ஆகிய ம�ொழிகளை இரண்டாம் ம�ொழியாகக் கற்பிக்கும் ஆங்கிலப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் என்ணிக்கை ஆண்டுத�ோறும் அதிகரித்து வருகிறது. இந்தப் ப�ோக்கு மாற்றி அமைக்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், வேகமாக நவீன மயமாகி வரும் சிங்கப்பூரில் ஆங்கில ம�ொழிக் கல்வி வாயிலாகத் தம் பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் மிகுதி என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் ப�ோக்கினால் ஏற்படக்கூடிய பலன்கள் ப�ொதுவாக உணரப்படுகின்றன. எனினும், நாம் கவனமாக இல்லாவிட்டால், சிங்கப்பூரின் எதிர்காலச் சந்ததிகள் தம் கலாச்சாரப் பண்புகளை முற்றாக இழந்திடும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதை நாம் சரியாக உணரவில்லை என்றே த�ோன்றுகிறது. எனவேதான் அரசாங்கத் தலைவர்கள் இரு ம�ொழிக் கல்வியின் இன்றியமையாமையைத் த�ொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆங்கில மரபு சாராத சிறந்த ஆங்கில இலக்கியங்களை நாம் பயன்படுத்தினாலும், அது தமிழ், மாண்டரின், மலாய் ஆகியவற்றின் வழி நம் ஆசியப் பண்பாட்டு மரபுடன் நாம் நேரடித் த�ொடர்பு க�ொள்வதற்கு ஈடாகாது. இந்த வகையில் இந்திய மரபு வழிவந்த சிங்கப்பூரர்கள் ஏனைய சின, மலாய் மரபு வழி வந்தவர்களைக் காட்டிலும் வேகமாகப் பண்பாட்டு வெற்றிடத்தை ந�ோக்கிச் சென்றுக�ொண்டிருப்பதாகத் த�ோன்றுகிறது. இதற்கு அரசைக் குற