எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 15

"ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா" என்னும் விளையாட்டு விழாவை கடந்த 21 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி வயது வரம்பை வைத்து பரவலாக ஆங்காங்கே இருக்கும் இந்திய இளையர்களை விளையாட்டின் மூலம் ஒருங்கிணைப்பதில் இவ்விழா பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. இந்திய இளையர்களின் மத்தியில் "ஸ்பெக்ட்ரா" ஆண்டுதோறும் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இவ்வாண்டின் மிகப் பெரிய முயற்சியாக "சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளையர்களுக்காகத் தமிழ் ஆய்வரங்கை நடத்துவதில் பெயர் பெற்ற அமைப்பு, தமிழ்ப் பேரவை. 2012ம் ஆண்டு உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாட்டை ஏற்பாடு செய்த பெருமையும் இத்தமிழ்ப் பேரவையைச் சாரும். "துடிப்புமிக்க சிங்கப்பூரில் இளமை ததும்பும் தமிழ்" என்ற கருப்பொருளைக் கொண்டு இவ்வாண்டின் மாநாடு அமைக்கப்பட்டுள்ளது. நம் தாய்மொழியின் செம்மையைப் பறைசாற்றும் தளமாக இம்மாநாடு அமையும். 35ம் செயற்குழுவின் அயரா முயற்சியில் இன்று பிரமாண்டமாக மேடையேறுகிறது "சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2014" வழக்கமாக தமிழ்ப் பேரவை நடத்தும் இந்த நிகழ்ச்சிகளைத் தவிர இவ்வாண்டு பற்பல புதிய முயற்சிகளிலும் 35ம் செயற்குழு களம் இறங்கியது. முதன்முறையாக வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நிகழும் தமிழ்மொழி விழாவில் அங்கம் வகித்தது தமிழ்ப் பேரவை. சிறியதொரு முயற்சி எடுத்து இளையர்கள் மத்தியில் தமிழ்மொழி விழாவை பிரபல படுத்த முடிவெடுத்தது. அது முதற்படியே! இனி வரும் ஆண்டுகளில் தமிழ்ப் பேரவையின் பங்களிப்பு சீரிய முறையில் இருக்கும் என நம்புகிற�ோம். அத�ோடு, சிங்கப்பூர் கலை மன்றம் நடத்திய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிலும் எங்கள் கால்களை பதித்தோம். தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்களைப் பற்றிய இலக்கிய முன்னோடிகள் அங்கத்தை நாங்கள் பல்வேறு வழிகளில் இணைந்து ஏற்பாட்டிற்கு உதவினோம். சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கை எங்களுக்குள் இருந்து அதை செயல்படுத்த மற்றுமொரு புதுமுயற்சியாக "மாலு மாலு லங்கா" என்ற சமூக சேவை திட்டத்திற்கு ஆதரவளித்தோம். இலங்கையில் தமிழர்கள் உள்ள பகுதியில் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் த�ொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கும் திட்டம் இது. ஆண்டுதோறும் இனி இத்திட்டத்தைத் தமிழ்ப் பேரவை தொடரும் என நம்பிக்கை கொள்கிற�ோம். இத்தருணத்தில் எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் 35ம் செயற்குழுவின் சார்பில் என் இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மிக முக்கியமாக, என் மீது நம்பிக்கை கொண்டு இச்செயற்குழு மிக சிறப்பான முறையில் செயல்பட எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்ப் பேரவையின் 35ம் செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூற கடமைப்பட்டுள்ளேன். பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளிலிருந்தும் நிலைகளிலிருந்தும் வந்து ஓராண்டு காலம் ஒரே குடும்பமாக இரவு பகல் பாராமல் பல நாட்கள் உழைத்தனர். நல்ல நண்பர்களாக வளர்ந்துள்ள எங்கள் உறவு மென்மேலும் வளர்ந்து சமூகத்திற்கு நல்ல பல சேவைகளை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்பது என் அவா. நன்றி இர்ஷாத் முஹம்மது தலைவர் 35ம் செயற்குழு சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை My heartfelt greetings to all. For the past 39 years, NUS Tamil Language Society has taken pride in conducting itself with the aims of increasing the interest and usage of the Tamil language amongst the youth. Ever since the inception of NUS TLS in 1975, it has been working towards the enrichment of the education and overall well-being of the Indian youth in Singapore. In that notion, NUS TLS has been organising the Saadhana ‘A’ Level Tuition Project for the past 30 years. We are very happy to say that this project has been a success in ensuring that Indian students who are preparing for their GCE ‘A’ Level Examinations excel and get a place in the local universities. Furthermore, the tuition that is offered via Saadhana is at a much subsidised rate. This benefits more Indian youth as costs would cease to be an obstacle to attaining quality education, and would also improve social mobility in the Indian community. This year, we have an unprecedented number of 120 students registered for this project. For the first time, 12 classes with a healthy student size for சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 35ம் செயற்குழு 13