எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 12

ஆிரியரின் செய்தி EDITORIAL "எழுச்சியில் பிறந்த இளந்தீ" என்ற சொற்றொடர் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் முழக்க வரியாகும். அதுவே இச்சிறப்பு மலரின் தலைப்புமாகும். ஆண்டுதோறும் வெளிவரும் பேரவையின் ஆண்டு மலர் இவ்வாண்டு சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டை முன்னிட்டு வெளிவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மேலும் இம்மலர் சிறப்புக்குரிய விதமாக ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழியிலும் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழியைப் பற்றி ஆய்வு செய்யும் மாநாட்டில் தமிழ் பேசாத, தமிழர் அல்லாத; ஏன், இந்தியரே அல்லாத ஒருவரும் தமிழ் மொழியைப் பற்றி ஆய்வுக்கட்டுரைப் படைக்கிறார். மேலும், மாநாட்டின் துவக்க விழாவிற்கு வருகையளிக்கும் சிறப்பு வருகையாளர்கள் சிலரும் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கும் நம் முயற்சிகளைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கில் இம்மலர் இருமொழிகளில் படைக்கப்படுகிறது. தமிழ் மொழியின் மகத்துவத்தைத் தமிழ் மொழியிலேயே விளக்கமளித்தோமேயானால் பிறருக்கு இம்மொழியின் சிறப்பு தெரியவர இயலாது. ஆக, தமிழ் மொழியின் பால் ஆர்வமும் பாசமும் நேசமும் கொண்ட இளையர்களாகிய நாங்கள், நம் தாய்மொழியின் சிறப்பை நம் பல இன சமூகத்துக்கு எடுத்துச்சொல்ல உறுதி கொள்கிறோம். இம்மலர் உருவெடுக்கக் காரணமான வடிவமைப்பு கலைஞர் இராஜா அரவிந்த் ராஜ், தொழில்நுட்ப வல்லுநர் முத்தையா நாச்சியப்பன், துணையாசிரியர் சையத் அஷரத்துல்லா மற்றும் 35ம் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறேன். இர்ஷாத் முஹம்மது சிறப்புமலர் ஆசிர